• Fri. Jan 24th, 2025

சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’ – பர்ஸ்ட் லுக்!

சன்னி லியோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ஓ மை கோஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி மற்றும் வெங்கட்பிரபு ஆகிய இருவரும் வெளியிடுகின்றனர்.

ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படமான ஓ மை கோஸ்ட்டில் நடிக்கிறார். இந்த படத்தில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட்பிரபுவும், நடிகர் விஜய் சேதுபதியும் வெளியிட உள்ளனர். வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி மாலை 6. 4.22 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.