நடிகர் ஆர்யா நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் கேப்டன். இப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேப்டன் ஃபர்ஸ்ட் லுக், பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த போஸ்டரில் துப்பாக்கியுடன் ஆர்யா நிற்க, அவரின் பின்னால் ராட்சத மிருகம் ஒன்று காணப்படுகிறது. இந்த வித்தியாசமான போஸ்டரை உருவாக்க, படக்குழு ஒன்றரை ஆண்டுகள் உழைத்துள்ளதாக கூறப்படுகிறது. கம்ப்யூட்டரில் கிராஃபிக்சில் உருவாக்கப்பட்ட அந்த ராட்சத மிருகம் தத்ரூபமாக வர அவர் கடுமையாக உழைத்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.