• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தூக்கு போட்டு தற்கொலை..,

வருசநாடு கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் சுருளிஆண்டவர் வயது 46 இவர் கடந்த சில ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வந்தார். அதில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் கூலி வேலை செய்து வந்ததாகவும் மேலும் சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் கூலி வேலை செய்து வந்ததாகவும் இந்நிலையில் அவ்வப்போது உடல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் வீட்டில் புலம்பி வந்ததாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு மன வேதனை ஏற்பட்டு நேற்று வருசநாடு அருகே பவளநகர் பகுதியில் உள்ள தனியார்க்கு சொந்தமான மாந்தோப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை தொடர்ந்து வருசநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுருளி ஆண்டவர் மனைவி நித்யாதேவி கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தூக்கு போட்டு இருந்த சுருளிஆண்டவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.