• Fri. Mar 29th, 2024

பாகிஸ்தானில் சீனர்களை கொல்ல தற்கொலைப்படை தாக்குதல்

பாகிஸ்தானில் கராச்சி பல்கலைக்கழகத்துக்கு அருகில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 3 சீனர்கள் உட்பட்ட 4 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு செயற்பட்டு வருகிறது.

எனினும் இந்த கிளர்ச்சியாளர்களை பாகிஸ்தான் அரசாங்கம் பயங்கரவாதிகள் என அறிவித்துள்ளது.இந்தநிலையில் குறித்த குழுவின் மஜிஸ் பிரிவை சேர்ந்த பெண் ஒருவரே தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளார்.சிந்து மாகாணத்தின் கராச்சி பல்கலைக்கழகத்தில் செயற்படும் கன்பூசியஸ் என்ற சீன கல்வி மைய செயற்பாடுகளை எதிர்த்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள பலுசிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பு தாக்குதலை நடத்தியது யார் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.30வயதான இவர் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.. இவரது கணவர் மருத்துவராக பணியாற்றுகிறார். அந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில் பலுசிஸ்தான் விடுதலை .இராணுவ அமைப்பை சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது இதுவே முதல்முறை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *