• Sun. Nov 10th, 2024

கூகுள் பே, போன் பே…இலவசத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் லாபம்

கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இந்த செயலிகள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன என்பது குறித்து யாராவது சிந்தித்தது உண்டா.?

நாம் செய்யும் ரீச்சார்ஜ் மற்றும் டிரான்சாக்ஷனுக்கு இது போன்ற செயலிகள் எந்தவித பணமும் வசூலிப்பதில்லை. இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கூகுள் பேயின் கடைசி வருமானம் ஆயிரம் கோடிக்கும் அதிகமானது ஆகும்.

நாம் கூகுள் பே போன்ற சேயலிகளை பயன்படுத்தும் போது அதிலிருந்து Riward கிடைக்கும். அதனை ஸ்கிராட்ச் செய்து பார்த்தால் Better luck next time என வரும். இதன் மூலமே கோடிக்கணக்கான வருமானம் கூகுள் பேக்கு கிடைக்கிறது. இதைத்தவிர ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற சிம் கார்டு நிறுவனங்கள் கூகுள் பேயை பயன்படுத்தி நாம் செய்யும் ரீசார்ஜுக்கு தனியாக கட்டணம் செலுத்துகின்றன.

அடுத்ததாக இன்றைய கால கட்டங்களில் நாம் எதற்கு பணம் செலுத்த வேண்டுமானாலும் அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே கூகுள் பே மூலம் அந்த பணத்தை செலுத்தி விடுகிறோம். இதற்காக மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை கூகுள் பே நிறுவனத்திற்கு வழங்குகிறது. இறுதியாக கூகுள் பேவில் 50% ஆபர் என சில Riward வந்திருக்கும். அது நமக்கு எந்த விதத்திலும் பலன் அளிக்காது. இதன் மூலமும் கூகுள் பேக்கு ஒரு தொகை கிடைக்கும்.

கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை கொடுக்கின்றன. இதன் பின்னால் கோடிக்கணக்கான லாபம் ஒளிந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *