• Mon. Apr 21st, 2025

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சுதாகரன் விசாரணைக்காக ஆஜர்..,

BySeenu

Mar 27, 2025

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்காக ஆஜரானார்.

அவரிடம் சுமார் ஒன்றேகால் மணி நேரம் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் மாதவன் கூடுதல் கண்காணிப்பாளர் முருகவேல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்டு அடங்கிய குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த சுதாகரன் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது பேசிய அவர்

தன்னிடம் நாற்பது கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் விசாரணை நன்றாக இருந்தது எனவும் தெரிவித்தார்.

கேட்ட கேள்விக்கு தனக்கு தெரிந்த உண்மையை தெளிவாக கூறிவிட்டேன் எனவும் கேள்விகளுக்கு தனக்கு இந்த உண்மையை கூறிவிட்டேன் என்றும் கூறியதுடன் முதன்முறையாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளேன். எனவும் விசாரணை தீவிரமடைந்துள்ளதா உண்மை வெளிவருமா என்பது குறித்து தெரியவில்லை எனவும் பதிலளித்தார். மேலும் மேலும் விசாரணைக்காக வந்துள்ளேன் விசாரணை முடிந்து விட்டது. கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளேன் என்றும் கூறிய அவரிடம் விசாரணை முறையாக சென்றுள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு இதை கேட்க வேண்டிய இடத்தில் கேளுங்கள் என பதில் அளித்து சென்றார்.