


புதுச்சேரியில் கடந்த 10ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் துவங்கியது. 12ஆம் தேதி பட்ஜெட்டை முதலமைச்சர் தாக்கல் செய்தார். தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இறுதி நாளான இன்று தனிநபர் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஏற்கனவே 15 முறை ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ள நிலையில் மீண்டும் இன்று காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

இதன் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர்(திமுக) சிவா,மாநில அந்தஸ்து பெற ஆட்சியை கலைத்து விட்டு வாருங்கள்..போராடுவோம் என முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து தனி நபர் தீர்மானத்தை அரசு தீர்மானமாக முதலமைச்சர் ரங்கசாமி கொண்டு வந்தார். தொடர்ந்து சபாநாயகர் செல்வம், மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
இதனை அடுத்து கடந்த 13 நாட்களாக நடைபெற்று வந்த சட்டப்பேரவை கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் செல்லும் ஒத்து வைப்பதாக அறிவித்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்…

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மாநில அந்தஸ்து வேண்டும் என்று மீண்டும் மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுவது என்பது மக்களை ஏமாற்றும் செயல் என விமர்சித்துள்ளார்.

