



மதுரை விமான நிலையம் அம்பேத்கர் சிலை முன்பு. பெருங்குடி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் நடத்தினர்.
நாளை அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மின் விளக்கு அலங்காரம் செய்து மைக் செட் வைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறி பெருங்குடி கிராம மக்கள் திடீரென சாலை மறியல் நடத்தி வருகின்றனர்.


மதுரை விமான நிலையம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு காவல்துறையினர் மின்விளக்கு மற்றும் மைக்செட் போட அனுமதி வழங்காததை கண்டித்து, திடீரென சாலை மறியல் செய்தனர். அதனைத் தொடர்ந்து அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் சீதாராமன், காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன் ஆகியோர் தற்போது கிராம மக்களுடன் பேச்சுவார்தை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது சாலை மறியல் கை விடப்பட்டது.


வழக்கமாக அம்பேத்கர் பிறந்த தினம், நினைவு தினம் ஆகியவற்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முன்னாள் நிர்வாகி ஐயங்காலை என்பவர் செய்து வந்தார். தற்போது அவர் மறைவை தொடர்ந்து சிலை பராமரிப்பு கமிட்டியை சேர்ந்தவர்கள் செய்ய முன்வந்த போது, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இது தொடர்பாக ஆர்டிஓ விடும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.



