


கோவை பக்கம் சென்று 13 வருடம் ஆச்சு, நான் ஜாலிமேனாக, தான் இப்போது படம் பார்க்க, சாப்ட, டான்ஸ் ஆட என ஹேப்பியாக இருக்கிறேன். வரிச்சியூர் செல்வம் இப்படி இருக்கிறாரே என கண்ணு போடுகிறார்கள். அது தான் என் மீதான அவதூறுக்கு காரணம். ஜாலியாக வரிச்சியூர் செல்வம் விளக்கம் கொடுத்துள்ளார்.
போலீசுக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையாக என் பேரன், பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். ரவுடி திருந்துனா, விட்ருவாங்க. இல்லைனா போலிஸ் என்கவுண்டர் தான் போடுவாங்க என வரிச்சியூர் செல்வம் பேட்டி அளித்துள்ளார்.

INSTAGRAMல் ரவுடி என கூறி, வீடியோ வெளியிட்டால் கை, கால்கள் உடைக்கப்பட்டு ஜெயிலில் தான் இருக்கனும் என INSTAGRAM ரவுடிகளுக்கு வரிச்சியூர் செல்வம் அட்வைஸ் கூறினார். இதற்கு மேல் புதிய தங்க நகை வாங்க போவதில்லை, அதிக ரவுடிசம் உள்ள படங்களை பார்க்கமாட்டேன் என வரிச்சியூர் செல்வம் பேசினார்.

கோயம்புத்தூரில் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டு பிடிக்க காவல்துறையினர் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து வரிச்சியூர் செல்வம் பேசிய போது..,
நான் எங்கும் செல்வதில்லை போலீசுக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையாக என் பேரன் பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். என் தலைமையில் இன்று ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இந்த செய்தி கேட்டு அங்கு முடியாமல் ஆகிவிட்டது. நான் திருந்தி கல்யாணம் கச்சேரிக்கு போய்க் கொண்டிருக்கிறேன்.
ஒரு வருடத்தில் மட்டும் 15 திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன். அப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எந்த பிரச்சனைக்கும் நான் செல்வதில்லை. நான் கோயம்புத்தூர் சென்று 13 வருடம் ஆகிறது. அங்கு நான் செல்ல வாய்ப்பில்லை. மேலும் அங்கு உள்ளவர்களிடமும், நான் எந்த தொடர்பிலும் இல்லை. என்னுடைய நண்பர் செல்லையா என்பவன் உள்ளார். அவரிடம் செல்போனில் பேசுவேன். அமைதியாக இருந்தாலும் எதற்கு என் மீது அவதூறு பரப்புகிறார்கள் என தெரியவில்லை என்றார்.
ஆண்டவன் புண்ணியத்தில் எனது தந்தை நல்லா சம்பாதித்து வைத்திருக்கிறார். சொத்து உள்ளது நான் எதற்கு எங்கும் செல்ல வேண்டும்.
தற்போது என்கவுண்டர்கள் நடப்பது குறித்த கேள்விக்கு :
சேட்டை பண்ணினால் சுட தான் செய்வார்கள். திருந்தினால் காவல்துறையினர் விட்டுவிடுவார்கள். ஏதாவது தப்பு செய்தால் சுடாமல் என்ன செய்வார்கள். ரவுடிசத்தை விட்டுவிட்டு ஒதுங்கி விட்டால், காவல்துறையினர் விட்டுவிடுவார்கள். இல்லையென்றால் நான் கொலை செய்வேன் என கூறி கொண்டே ரவுடிசம் செய்தால் காவல்துறையினர் சுட்டு தான் பிடிப்பார்கள்.

என்கவுண்டருக்கு ஆதரவா? என்ற கேள்விக்கு?
காவல்துறையினர் நடத்தும் என்கவுண்டர்களை ஆதரித்து தான் ஆக வேண்டும். 10கோடி மக்கள் இருக்கும் தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் காவல் துறையினர் தான் உள்ளனர். இவர்கள் செய்யும் சேட்டைக்கு என்ன செய்ய முடியும். அங்க கொலை இங்க கொலை என பண்ணினால் போலீஸ் சுட தான் செய்வார்கள்.
நல்லவர்களை சுட்டால் நல்லவர்களை சுட்டு விட்டார்கள் என போலீசை குறை சொல்லலாம். ஆனால் சுட்டவர்கள் எல்லாம் ரௌடி பய, திருட்டுப்பய, காவாலிப்பய என இவர்களை தான் போலீஸ் சுடுகிறார்கள்.
நானெல்லாம் திருந்திட்டு எந்த பிரச்சினை வேண்டாம் என்று இருக்கிறேன். இப்போது நான் எங்கு சென்றாலும் போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டு தான் போகிறேன்.
எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது. சொந்த பந்தத்திற்குள்ளான பிரச்சனை தான் குற்றச்சாட்டு. கடைசியாக எனக்கு 2018 மதுரையில் ஒரு சின்ன வழக்கு. கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. என்னை காவல்துறையினர் பார்க்கிறார்கள். வீட்டை சுற்றி கேமரா உள்ளது.
வரிச்சியூர் செல்வம் இப்படி இருக்கிறாரே என கண்ணு படுகிறார்கள். யார் இவர் இப்படி இருக்காறரே இதுதான் சாமி. வேற என்ன இருக்கு. நான் இப்படி இருப்பதே பொறாமை தான். இந்த ஸ்டைலில் இருப்பதே சிலருக்கு பொறாமையாக இருக்கிறது.
என் மீது ஏழு வருஷத்துக்கு முந்தைய வழக்குகள் தான் உள்ளது. தற்போது எனக்கு எந்த வழக்குகளும் இல்லை. எந்த பிரச்சனைக்கும் செல்வதில்லை. போவதற்கு வேலையும் இல்லை.
கோயம்புத்தூரில் இருந்து எந்த காவல்துறையினரும் என்னிடம் பேசவில்லை. மதுரையில் உள்ள காவல்துறையினரிடம் நான் தான் இது போன்ற செய்தி வருவதாக கூறினேன். என் மீது ஏழு வழக்குகள் தான் உள்ளது. அதில் இரண்டு கொலை வழக்கு. மற்றவை அடிதடி வழக்குகள்.

விஜய் கட்சியில் இணைவீர்களா என்பது குறித்த கேள்விக்கு ?
நமக்கும், அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என பதிலளித்தார். நம்ம எப்போதும் ஜாலி மேன் தான். படம் பார்த்தோமா சாப்பிடறோமா? தூங்குகிறமோ? டான்ஸ் ஆடுகிறோமா என மாதிரி ஜாலியா என்ஜாய் பண்றோம். இதுதான் என்னுடைய பொழுதுபோக்கு. மதுரை விமான நிலையத்தில் படம் ரிலீஸ் ஆனபோது, நடிகர் விஜய் நேரில் சந்தித்து சிறையில் வில்லன்களை அதிகளவிற்கு அடிக்க வேண்டாம் என அவரிடம் கோரிக்கை விடுத்தேன்.
ஓட்டுனர் செந்தில்குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கோயம்புத்தூரில் யாரும் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு?
அது போன்று யாரும் இல்லை என தெரிவித்தார். சுட்டு பிடிக்க வேண்டும் என்று வந்த செய்தி எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. அதாவது தவறு செய்திருந்தால் ஓகே. எதுவும் செய்யாத நிலையில் இப்படி செய்தி வந்தது ஏன் என தெரியவில்லை.
காவல்துறையினர் பெயர் வாங்குவதற்காக என்கவுண்டர் செய்கிறார்கள் என்பது குறித்த கருத்து தவறானது. பெயருக்காக எதற்காக போலீஸ் சுட வேண்டும் என்ற தேவை ஏன் இருக்கிறது.
டிஜிபி, ஏடிஜிபி தற்போது தப்பு செய்தால் கொல்லுங்கள் என மட்டும் தான் சொல்வார்கள். யாரையும் பிடித்து சென்று கண்ணை கட்டி என்கவுண்டர் செய்யவில்லை.

இப்போது உள்ள காவல் துறையினர் தப்பு செய்தால் விடுவதில்லை. ஒன்னு காலை உடைப்பார்கள். இல்லை என்றால் காலில் சுட்டு பிடிததுக் கொள்வார்கள். மனிதர்களாக இருந்தால் சரி. மிருகமாக இருந்தால் என்கவுண்டர் செய்ய தான் ஆக வேண்டும். நான் செய்ததும் தவறு தான். அவர்கள் என் மீது பொய்யான வழக்கு ஒன்றும் போடவில்லை. நான் நிரபராதி என்பதே நீதிமன்றத்தில தெரிவிப்போம்.
மதுரை மீனாட்சி பட்டினம் இங்க வந்து மீனாட்சியை விட பெரிய ஆள் என்று சொல்லி யாரும் முன்னேறியதே கிடையாது. அதான் மதுரையோட கெத்து. மதுரை மாநகர காவல் ஆணையர் வந்து நான்காண்டுகள் ஆகிறது. இதுவரை எந்த என்கவுண்டர் நடக்கவில்லை. தப்பு செய்ததால் என்கவுண்டர் நடந்துள்ளது. அன்று சரக்கு போடுவதால் எங்கு விற்கிறார்கள் என தெரியும். ஆனால் தற்போது மாத்திரை தான் அதிக அளவுக்கு பயன்படுத்துகிறார்கள்.
மாத்திரை, போதை மாத்திரை, கஞ்சா அதிக அளவில் விற்கப்படுகிறது. தென்மண்டல தலைவர் அஸ்ராகார்க் இருக்கும்போது இதனை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். தற்போது காவல்துறையினர அதனை நடைமுறைப்படுத்துகின்றேன்.

ஜெயிலுக்குள் இருக்கும் போது கஞ்சா எப்படி வருகிறது என்று கேட்பேன். ஆந்திரா , ஒடிசா பக்கத்தில் இருந்தும் கஞ்சா வருவதாக தெரிவித்தார்கள். தற்போது தேனி மாவட்டத்தில் எல்லாம் கஞ்சா வருவதில்லை.
ரவுடியா இருப்பது கெத்து என நினைத்து ரீல்ஸ் வீடியோ பதிவு செய்தால் கை, காலை தூக்க முடியாமல் கை உடைந்து கிடக்க வேண்டும். காலை தூக்க முடியாமல் கால் உடைந்து தான் கிடைக்க வேண்டும்.
வெளியில் பேசலாம் காவல் நிலையத்தில் உட்காரும் போது தான் தெரியும் ஜட்டியுடன் உட்கார வைத்து விடுவார்கள் இனிமேல் எந்த தப்பும் செய்ய மாட்டேன் என கெஞ்சும் அளவிற்கு நடந்து கொள்வார்கள் காவல் நிலையத்தில் போய் நான் ரவுடிதான் என சொல்லிபாருங்கள் தெரியும் என்றார்.
இன்ஸ்டாகிராம் மூலம் ரவுடிகள் உருவாகினால் ஜெயிலுக்குள் தான் இருக்க வேண்டும். கை உடைபடும், கால் உடைபடும் ஒழுங்காக படித்து ஏதாவது நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வேலைக்கு செல்வதுதான் நல்லது.

இதை விடுத்து, விட்டு செயின் அறுப்பது இன்ஸ்டா்ஸ்டோரி என்ற பெயரில் கத்தியை வைத்துக்கொண்டு வீடியோ வெளியிடுவது எல்லாம் கதவுகள் உடைக்கப்படும், கைகள் உடைக்கப்படும், கால்கள் உடைக்கப்படும் என தெரிவித்தார்.
நான் அஜித் படத்துக்கு எல்லாம் போகவில்லை. ஓவர் ரவுடிசம் இருக்கும் படத்துக்கு நான் போக மாட்டேன். அவர்கள் 200 கோடி ரூபாய், 150 கோடி ரூபாய் வாங்கி விட்டு சென்று விடுகிறார்கள்.
படம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 2 மணி நேரம் நடித்து விட்டு இரண்டு கோடி ரூபாய் வாங்கி விட்டுப் போகிறார்கள் , ரசிகர்கள் முட்டாப் பயலுக்கு என்ன தெரிகிறது? எனது தம்பி ஒருத்தர் ஜி யு பி படத்தை எட்டு முறை பார்த்துள்ளார்.

என்னை சுட்டுபடிக்க. உத்தரவு என்ற இது போன்ற செய்திகளை உறுதி செய்து விட்டு, போடுங்கள் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என்னிடம் ஆயுதத்திற்கு வேலையே கிடையாது.15 நாளைக்கு ஒருமுறை என் வீட்டிற்கு வந்து முழுவதுமாக சோதனை செய்து விட்டு போகிறார்கள்.
எனக்கு இதற்கு மேல் நகை எடுக்க விருப்பமில்லை. எனக்கு போதுமானது இதற்கு மேல் நகை போட்டால் என்னால் பாதுகாக்க முடியாது. வரிச்சியூர் செல்வம் என்று அடையாளத்தோடு இருந்து விடுகிறேன்.
என்னை பார்த்து ஏராளமானோர் நகை அணியை தொடங்கிவிட்டார் என்றால் நகை கடைக்கு நல்ல வியாபாரம் நடப்பது மகிழ்ச்சி தான். ஒரு வருடத்திற்குள் பத்து கல்யாணம் நடத்தி வைத்துள்ளேன் என்றார்.


