
சேலம் அழகாபுரம் பெரிய புதூர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் விற்பனையாளர்கள் எடையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியாக பொருள்கள் வழங்கப்படுவதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய 20 கிலோ அரிசியை எடை போட்டுப் பார்க்கும்போது 17 கிலோ இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து நியாய விலை கடை விற்பனையாளர் செந்தாமரை மற்றும் எடையாளர் கண்ணன் ஆகியோரை கண்டித்ததுடன் தொடர்ந்து இதுபோல் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களை பதுக்க நினைத்து முறைகேட்டில் ஈடுபட்டால் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
