தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாரத்தில் உர கடைகளில் திடீர் ஆய்வு தென்காசி டிசம்பர் 19 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டார பகுதியில் உள்ள உரக் கடைகளில் வருவாய்த்துறை மற்றும் தோட்டக்கலை வேளாண்மை துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுபற்றிய விவரமாவது, சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் நாடெங்கிலும் வறண்ட குளங்கள் நிரம்பி வழிகின்றது. தரிசு நிலங்களாய் கிடந்த இடங்கள் இன்று பண்படுத்தப்பட்டு விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடையநல்லூர் வட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நெல் நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் கருப்பாநதி அணைக்கட்டு பகுதி தொடங்கி வீரசிகாமணி பெரியகுளம் வரை சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் உழவுப் பணிகளில் ஈடுபட்டவர்கள் உரத் தட்டுப்பாடு நிலவுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வேளாண்மை துறைக்கு புகார் மனுக்கள் மூலம் தெரிவித்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்பேரில் மாவட்டமெங்கும் உரத்தட்டுப்பாப்டை போக்கவும், அதிக விலைக்கு உரங்களை விற்றால் உரக்கடை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்தது. இதனால் விவசாயிகளுக்கு தங்குதடையின்றி யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்கள் கிடைக்கப்பெற்றன.
நெல் நடவு செய்ததில் இருந்து 15 நாட்களில் யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்கள் கலந்து பயிர்களுக்கு இடப்படும். ஏற்கனவே அதிக மழையினால் கோட்ட மலை அடிவாரம் கருப்பா நதி அணைக்கட்டு பகுதிகளில் வயல்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தற்போது தண்ணீர் வடிந்து. எனவே விவசாயிகள் பயிர்களுக்கு உரம் இட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் வரை ரூபாய் ஆயிரத்து 50 க்கு விற்ற பொட்டாஷ் உரம் தற்போது ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை உருவாகும் விவசாயிகளை வாட்டி வதைத்த போதும் நடவு பணிகளில் தீவிரம் காட்டி விவசாயிகள் உறவுக்காக கடைகளுக்கு சென்று வந்தனர். தற்போது யூரியா மூடு விற்பனை விலை சில்லரை ரூபாய் 650 எனவும் பொட்டாஷ்ம் உரம் 1600 எனவும் விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைமை உத்தரவை ஏற்று கடையநல்லூர் வட்டார பகுதிகளில் வருவாய்த்துறை சார்பில் வட்டாட்சியர் ஆதிநாராயணன் தோட்டக்கலை சார்பில் இணை இயக்குனர் ஆழ்வார் சாமி வேளாண்மை விற்பனை சார்பில் அலுவலர் மொழி அப்துல் காதர் கடையநல்லூர் வட்டார ஒரு அலுவலர் சிவமுருகன் ஐயா கொண்ட குழுவினர் அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
உர விற்பனையாளர்கள் பழைய இருப்பில் உள்ள பொட்டாஷ் உரத்தை பழைய விலைக்கே விற்க வேண்டும் எனவும் அதிக அளவில் விற்பனை செய்யக்கூடாது எனவும் வலியுறுத்தினர் மீறி செயல்படும் உரக்கடை கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அத்தியாவசிய விவசாயப் பொருட்களை தட்டுப்பாட்டை போலியாக உருவாக்கக் கூடாது எனவும் விற்பனையாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.