


கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே பின்னலூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று காவடி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 02-04-25 கொடியேற்றி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இந்த பங்குனி உத்திர திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு வழிபாடுகள் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான காவடி உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் அலங்கரிக்கப்பட்ட பால்காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் மற்றும் செடல் அணிந்த பக்தர்கள் ஊரின் பல்வேறு வீதிகள் வழியே வலம் வந்தனர். மேலும் வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பள்ளக்கில் வலம் வந்த சுவாமியை கிராம பொதுமக்கள் வழிநெடுக வழிபட்டனர் இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று காவடி எடுத்தனர்.

