



கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இ கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகள் சுதா இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் தாம்பரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் ஏறி ஆவட்டி கூட்ரோடு செல்ல வேண்டும் என டிக்கெட் எடுத்துள்ளார்.

பேருந்தில் நடத்துனர் ஆவடியில் இறக்கிடுவதாக கூறி அவரை ஏற்றிய நிலையில் இரவு 9 மணி அளவில் பேருந்து ஆவட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது அவரை இறக்கிவிட்டு உள்ளனர். இந்நிலையில் சுதா சர்வீஸ் சாலையில் செல்வதாக கூறி தானே சென்னையில் டிக்கெட் கொடுத்தீர்கள் தற்பொழுது தேசிய நெடுஞ்சாலையில் இறக்கி விட்டால் எவ்வாறு செல்வது என்று கூறி ஆம்னி பேருந்தை விடாமல் தன்னை சர்வீஸ் சாலையில் இறக்கி விட்டால் மட்டுமே பேருந்து விடுவதாக கூறி அரை மணி நேரத்திற்கு மேலாக பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் மறித்து பேருந்து ஓட்டுற இடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

பிறகு பேருந்து ஓட்டுனர் சுதாவை வண்டியில் ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கீழே இறங்கி சர்வீஸ் சாலை வழியாக சென்று அந்தப் பெண் கூறிய இடத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

