மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கண்டறியவும், பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்யும்மாறு “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு மாதமும் 3 புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மறுநாள் காலை 09.00 மணி மணிவரை வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலங்களை ஆய்வு செய்வதுடன், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யவும் அரசுத் துறை வழங்கப்படும் சேவைகளின் தரத்தை ஆய்வு செய்து மேம்படுத்திடவும் வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்றும், இன்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தங்கி மக்களிடம் நேரடியாக குறைகள் கேட்டறிந்தார். ஆய்வுகள் மேற்கொண்டார்.