• Tue. Apr 30th, 2024

கோகோ விளையாட்டுக்கு கோப்பை சேர்க்க, சர்வதேச கோக்கோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Oct 18, 2023

மதுரை விமான நிலையத்தில் சர்வதேச கோகோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திய இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.

மலேசியாவில் உள்ள மலாக்கா சர்வதேச அளவிலான கோகோ போட்டியில் கலந்து கொண்டு விளையாடி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு மலேசியா சென்று விளையாடி வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஜாய் நடாஷா மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பால ஷங்கர் டெல்லியில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தனர்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து முதலில் பேசிய மாணவி ஜாய் நடாஷா கூறியதாவது,

நான் ஆறாவது வகுப்பு படிக்கும் போது இருந்து கோகோ பயிற்சி பெற்றேன்.

டெல்லியில் 15 நாட்கள் சிறப்பு விளையாட்டு முகாமில் பயிற்சி பெற்று மலேசியா சென்று மலாக்காவின் நடைபெற்ற சர்வதேச போட்டியில் தங்கம் வென்றுள்ளேன். எனக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி. தமிழகத்திலிருந்து நான்கு பேர் சென்றோம். அதில் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டோம். முதலமைச்சர் கோப்பைக்கு கோகோ விளையாட்டையும் சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.

வெற்றி பெற்ற கல்லூரி மாணவர் பால சங்கர் கூறுகையில்,

நான் வெற்றி பெற்றதற்கு என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முக்கிய காரணம். 8ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன். கடந்தாண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சிறப்பாக விளையாடியதால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். இதைத்தொடர்ந்து உலகக் கோப்பை மற்றும் அல்டிமேட் போட்டிகளுக்கும் தேர்ச்சியாக வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறேன். முதல்வர் கோப்பையில் கோகோ விளையாட்டையும் சேர்க்க வேண்டும்.

வெற்றி பெற்ற மாணவர்கள் வந்த அதே விமானத்தில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கருவறை குறும்படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வந்தடைந்தார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் சர்வதேச கோகோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *