• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரையில் உற்சாகமாக பள்ளி சென்ற மாணவர்கள் !

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 1 வருடத்துக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியது.  இதனையடுத்து  செப்1ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கலாம் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், மதுரை உள்ள  மதுரை மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகள்   மற்றும் கல்லூரிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டு மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வர தொடங்கினார்கள்.   மேலும் ,அனைத்து பள்ளிகளிலும் காலை எட்டு முப்பது மணி அளவில் இருந்து மாணவர்கள் வரத்தொடங்கினர் பள்ளியின் முகப்பில் ஆசிரியர்கள் மாணவர்களை முகக் கவசம் அணிந்தவாறு உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினர்.

 அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களையும் வரிசைப்படுத்தி உடல்  வெப்பநிலை பரிசோதித்து பிறகு வகுப்பறைக்கு செல்ல அனுமதித்தனர்.  இந்நிலையில்,   மாணவர்கள் இடைவெளியோடு அமர்ந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.