• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% தேர்ச்சி..,

ByS. அருண்

May 17, 2025

திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரம்பூர் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2024 மற்றும் 25 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் குமரேசன் என்ற மாணவன் பள்ளியின் முதல் மாணவனாகவும் இதே பள்ளியில் பயின்றார் சக்தி சரவணன் என்ற மாணவன் அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றும் சாதனை படைத்துள்ளனர்.

இவர்களை பள்ளி தாளாளர் ராஜசேகரன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். மேலும் மாணவர்கள் எதிர்காலத்தில் இன்னும் சாதனைகள் படைக்க வேண்டும் என அவர் கூறினார். மேலும் பள்ளியில் 400 க்கும் மேல் மதிப்பெண் எடுத்த மாணவிகளை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். சக்தி சரவணன் என்ற மாணவன் கூறுகையில் வருங்காலத்தில் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களைப் போன்று விஞ்ஞானியாக வரவேண்டும் என்று ஆசை உள்ளதாக கூறினார்.

மேலும் இந்தப் பள்ளியானது தொடர்ந்து 2023, 24. 2024,25 கல்வி ஆண்டை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.