
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நேற்று பலத்த இடி மின்னல் சூறாவளி காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதில் துறையூர் அருகே உள்ள கோணப்பாதை கிராமத்தில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவில் கோபுரம் மீது இடி விழுந்ததில் கோவில் கோபுரம் சேதமடைந்தது.

கோபுரத்தில் இருந்த மூன்று சாமி சிலைகள் உடைந்து கீழே விழுந்தன மற்றொரு சாமி சிலையின் தலை மட்டும் உடைந்த நிலையில் காணப்பட்டது. இந்த திருக்கோவில் கும்பாபிஷேகம் எட்டு மாதங்களுக்கு முன்பு தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. துறையூர் அருகே இடி விழுந்ததில் கோவில் கோபுரம் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
