உசிலம்பட்டி நகர் லயன்ஸ் சங்கத்தின் 37 ஆவது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் முன்னாள் மாவட்ட ஆளுநர்களான ஆர் கே தங்கராஜ், நந்தகுமார், கள்ளந்திரி முத்துராமலிங்கம், முருகேசன், அறிவழகன் போன்றோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தலைவராக செல்வராஜ், செயலாளராக இனியன் மற்றும் பொருளாளராக அருண்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்டனர். இவ்விழாவில் வி பெருமாபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு 10 இருக்கையில் வழங்கப்பட்டன.

கீழசம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு RO water purifier வழங்கப்பட்டது. உசிலம்பட்டியில் சிறந்த சேவையில் ஈடுபட்ட ஆறு நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு லயன்ஸ் புதிய பாரதி விருதுகள் வழங்கப்பட்டது.





