• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளி மாணவ மாணவிகளின் காலணிகள் புதரில் வீசப்பட்ட சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர், வடுகபட்டி, பூதிப்புரம் பகுதிகளில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 2019 – 20 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான காலணிகளை புதர் மற்றும் ஊரணி பகுதியில் குப்பை போல, வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உசிலம்பட்டியில் இயங்கி வரும் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வழங்கியது போக இருப்பு வைக்கப்பட்டிருந்த காலணிகளை பள்ளி தலைமையாசிரியர் பரமசிவம், மேல் அலுவலர்களின் உத்தரவின்றி, புதர் மற்றும் ஊரணி பகுதியில் வீசி சென்றது தெரியவந்துள்ளது.

அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர் பரமசிவத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மாணவ மாணவிகளுக்கு வழங்கிய பொருட்களை பள்ளி தலைமையாசிரியரே குப்பை போல புதர் பகுதியில் வீசிய சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.