கோவையில் நடைபெற்ற வாகன தயாரிப்பு போட்டி, படைப்புகளை மாணவர்கள் காட்சிப் படுத்தியிருந்தனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஃபிரட்டர்னிட்டி ஆஃப் மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் (எஃப்எம்ஏஇ) மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் இணைந்து வாகனத் தயாரிப்பு போட்டியின் 10வது பதிப்பை கோவை செட்டிபாளையத்தில் உள்ள காரி மோட்டார் ரேஸ் டிராக்கில் நடத்தியது.
இந்த பதிப்பில், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து சுமார் 60 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு தேசிய அளவிலான போட்டியில் எலக்ட்ரிக் மொபிலிட்டி மற்றும் நிலையான போக்குவரத்து தீர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
வாகன எடையைக் குறைத்தல், வடிவமைப்புத் திறனை மேம்படுத்துதல் மற்றும் மின்சார வாகனத் தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதன் மூலம் பங்கேற்பாளர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு தூண்டும் வகையில் அமைந்தது.