

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டலில் துவங்கிய மிட் நைட் டின்னர். இரவு பதினோரு மணி முதல் 299 ரூபாய்க்கு நான் வெஜ் உணவுகளுடன் அசத்தலான பஃபே.
கோவை என்.எஸ்.ஆர்.சாலையில் உள்ள ஜே.கே.ஓட்டலில் இரவு நேர உணவு பிரியர்களுக்காக இரவு பதினோரு மணி முதல் அசத்தலான பஃபே உணவு திருவிழா துவங்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்த படியான மெட்ரோ நகரமாக கோவை மாறி வரும் நிலையில், இரவில் ஜாலியாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வெளியே சென்று பொழுது போக்குவதை பலர் தற்போது வழக்கமாக்கி உள்ளனர்.

இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையும் நெருங்கி வரும் நிலையில் இரவிலும் ஷாப்பிங் செய்வதை பெரும்பாலோனோர் விரும்புகின்றனர். இது போன்றவர்களின் வசதிக்காக கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்.சாலையில் உள்ள ஜே.கே.ஓட்டலில் மிட் நைட் டின்னர் உணவு திருவிழா துவங்கப்பட்டுள்ளது.
தாங்களே பரிமாறிக்கொள்ளும் பஃபே முறையாக துவங்கப்பட்ட இந்த உணவு திருவிழா இரவு பதினோரு மணி துவங்கி அதிகாலை வரை நடைபெறும்.


இதில் ஸ்டார்ட்டர் துவங்கி மெயின் கோர்ஸ்,டெசர்ட் என நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையான அசைவ,,சைவ,உணவு வகைகள் வெறும் 299 ரூபாய்க்கு வழங்க உள்ளதாக ஜே.கே. ஓட்டலின் பொது மேலாளர் சக்திவேல் தெரிவித்தார்.

ஜே.கே.ஓட்டல்ஸ் குழுமங்களின் சேர்மன் ஜெயராஜ், நிர்வாக இயக்குனர் பிரபு ஆகியோரின் உத்தரவுக்கிணங்க இந்த மிட் நைட் டின்னர் உணவு திருவிழா துவங்கி உள்ளதாக கூறிய அவர்,தேர்ந்த அனுபவமுள்ள சமையல் கலை நிபுணர்கள் குழுவுடன் தயாரிக்கப்படும் இந்த உணவு வகைகள் தினமும் வெவ்வேறு மெனுக்களில் உணவு பிரியர்களின் வரவுக்காக காத்திருக்க உள்ளதாக தெரிவித்தார்.
299 ரூபாய்க்கு அசைவ பஃபே வகை உணவுகள் கொண்ட இந்த உணவு திருவிழா கோவை வாழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

