• Fri. Nov 8th, 2024

வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட இரண்டு கார்கள்

BySeenu

Oct 23, 2024

மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட இரண்டு கார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு ஏழு மணியளவில் பெய்ய துவங்கிய மழை இடி மின்னலுடன் இரண்டு மணிநேரம் கொட்டி தீர்த்தது..இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது..கோவையை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.. இந்நிலையில் இன்று வானிலை அறிவிப்பாக கோவை மாவட்டத்தில் ஆரஞ்ச் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது..இன்று காலை முதல் மேட்டுப்பாளையம் பகுதியில் வெயில் அடித்த நிலையில் மாலை முதல் வானிலை மாறி கன மழை பெய்ய துவங்கியது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், மேட்டுப் பாளையத்தில் இருந்து கோவை செல்லும் சாலையில் மத்தம்பாளையம் அருகே கோட்டை பிரிவு பகுதியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் வழியில் உள்ள ஏழு எருமை பள்ளம் பகுதியில் இருந்த இருக்கார்கள் தண்ணீரில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *