• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

சனி – ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது..

ByA.Tamilselvan

Jul 29, 2022

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில், சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. ஆனாலும், சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கக் கூடாது என்றும், பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.