• Sat. Apr 20th, 2024

மாணவர்களுக்கு சமயக்கல்வியை கற்றுத்தர வேண்டும்

ByA.Tamilselvan

May 14, 2022

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் மத கருத்துக்களை கற்று கொடுக்க அவரவர் மதங்களில் சமயக்கல்வியை கற்றுத்தர வேண்டும் என விசுவ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர் ஸ்தாணுமாலையன் மதுரையில் பேட்டி
விசுவ ஹிந்து பரிஷத் அகில உலக இணை பொதுச் செயலாளர் கோ.ஸ்தாணுமாலையன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “மதுரையில் ஜூன் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் துறவிகள் மாநாடு நடைபெறுகிறது, மாநாட்டில் 300 க்கும் மேற்பட்ட துறவிகள் பங்கேற்க உள்ளனர், தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள், இந்து அமைப்புகள் மாநாட்டில் பங்கேற்பு உள்ளனர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் மத கருத்துக்களை கற்று கொடுக்க அவரவர் மதங்களில் சமயக்கல்வியை கற்றுத்தர வேண்டும், தமிழகத்தில் மாணவர்களுக்கு முறையான கல்வி முறை இல்லாத காரணத்தால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்கள், கிறிஸ்தவ பள்ளிகளில் மத மாற்றங்கள் நடைபெறுகிறது, திருவள்ளூரை கிறிஸ்தவர் ஆகவும், சைவ, வானவன் வழிபாட்டு முறைகளை கிறிஸ்தவர்களின் தோமா வழிபாட்டு முறையேன மாற்றப்பட்டுள்ளது” என கூறினார்.
உடன் மதுரை நிர்வாகி வேணுகோபால், தினமலர் நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, மதுரை தேவகி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் நாகேந்திரன்.மாநில துணை தலைவர் கதிர்வேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *