சிவகங்கையில் பள்ளி பயில கட்டிடம் இன்றி தவிக்கும் 115 மாணவர்கள். புதிய கட்டிடம் கட்டித்தர மாணவர்கள் வாட்ஸ் அப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள வாராப்பூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 115 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்பொழுது கொரானா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளியில் திறக்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக 60 ஆண்டு பழமையான பள்ளி கட்டிடங்கள் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நாடக மேடையில் ஷிப்ட் முறையில் இரு பிரிவாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்கள் படிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை அப்பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவன் தங்கள் பள்ளியில் படிக்கும் 115 மாணவர்களின் கல்விக்காக புதிய கட்டிடம் கட்டித்தர 8 ம் வகுப்பு மாணவன் இறைவணக்கத்தின் போது அரசுக்கு கோரிக்கை வைத்த வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

கெரானா வைரஸ் கட்டுப்படுத்துவதிலும், கல்வியிலும் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தி மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விரைந்து புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.