• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில்.., பி.டெக், எம்.டெக் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Byவிஷா

Nov 14, 2023

சென்னையை அடுத்துள்ள கட்டாங்கொளத்தூர் எஸ் ஆர் எம் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான பி டெக் மற்றும் எம் டெக்ஸ் சேர்க்கைக்காக நடைபெற உள்ள நுழைவுத் தேர்வில் பங்கேற்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், எஸ் ஆர் எம் கல்வி குழுமத்தின் சென்னை கட்டாங்கொளத்தூர், ராமாபுரம், வடபழனி, திருச்சி, ஹரியானா மாநிலம் சோனேபட், ஆந்திர மாநிலம் அமராவதி மற்றும் டெல்லி காசியாபாத் வளாகங்களில் பிடெக் மற்றும் எம்டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.