திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகளிடையே வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வோட் (VOTE) என்ற ஆங்கில எழுத்து வடிவில் கல்லூரி மாணவ, மாணவிகள் நின்று வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து பிரச்சாரம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேடசந்தூர் ராஜேந்திரன், குஜிலியம்பாறை நந்தகோபால், வட்ட வழங்கல் அலுவலர் மணிகண்டன் , வருவாய் ஆய்வாளர்கள் பாரதி, சல்மா, தமிழ்செல்வி ஆகியோர் பங்கேற்று வாக்களிப்பது அவசியம் குறித்து பேசினார்கள்.





