• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபரை கைது செய்து விசாரணை..,

ByP.Thangapandi

Mar 25, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்து வடகத்தியான்பட்டியைச் சேர்ந்த சாந்தி (67). இவர் வீட்டின் அருகில் சுமார் மூன்று அடி உயரமுள்ள 3 கஞ்சா செடிகள் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.,

இது குறித்து எழுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த சூழலில்

இந்நிலையில் தகவலறிந்த எழுமலை காவல் ஆய்வாளர் இளவரசு தலைமையில் போலீசார் விரைந்து சென்று வடகத்தியான்பட்டியில் உள்ள சாந்தி என்பவருடைய வீட்டின் அருகில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை பறித்து சாந்தி என்ற நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,