• Fri. Mar 29th, 2024

அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்ற செய்ய கோரி போராட்டம்!..

மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சேவியர் ஆரோக்கியராஜ். இவர் பள்ளி மாணவர்களிடம் நன்கொடை என்ற பெயரில் அதிக பணம் வசூலிப்பதாகவும், பள்ளி மாணவ மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் தகாத வார்த்தையில் பேசுவதாகும் கோரி இவரை பணியிட மாற்றம் செய்யக்கோரி கல்குறிச்சி கிராம பொதுமக்கள் பள்ளி வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

மேலும் இதுகுறித்து கல்குறிச்சி ராதா சிவசந்திரன் கவுன்சிலர் கூறுகையில், பள்ளியில் வேலை பார்க்கும் தலைமை ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் அதிக பணம் வசூலிக்கிறார். ஆசிரியர்கள் மாணவர்களிடம் தகாத வார்த்தையில் பேசுகிறார். மேலும் என்னிடம் ஆசிரியர்கள் தரப்பிலும் புகார் வந்துள்ளது இப்புகார் அரசு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இடமும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறேன்.

மேலும் இதுகுறித்து தலைமையாசிரியர் கேட்டபோது, ‘நான் ஆசிரியரிடம் மற்றும் மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசவில்லை என்றும், மாணவர்களிடம் பணம் வாங்கியது உண்மை. பள்ளியில் வளாகத்தில் சிசிடிவி வைப்பதற்காக பெற்றோர் ஆசிரியர் கூட்டம் போட்டு தீர்மானம் போடப்பட்ட பிறகே பணம் வாங்கப்பட்டது’ என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *