• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

‘வலிமை’ படத்துடன் மோதும் ‘எதற்கும் துணிந்தவன்’?

Byமதி

Nov 17, 2021

அஜித்தின் ’வலிமை’ பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது என்பதை படக்குழுவினர் முன்னரே அறிவித்து உள்ளனர். இந்த நிலையில், சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படமும் பொங்கலையொட்டி வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம்தான், ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அறிவித்தார் இயக்குநர் பாண்டிராஜ். மேலும், சன் பிக்சரஸ் நிறுவனம் தயாரிப்பில் தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ வெளியாகியிருக்கிறது. அதே சன் பிக்சரஸ் தயாரிப்பில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை தயாரிப்பதால் அடுத்ததாக பொங்கலையொட்டி வெளியிடவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

விஜய்யின் ‘பீஸ்ட்’ அடுத்த மாதம்தான் படப்பிடிப்பு நிறைவடைவதால் கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் இறுதியில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.