

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான படம் “வலிமை”.. பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது.
ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என சமூக ஊடங்களில் செய்திகள் வெளியானது.. மேலும் படத்தின் பிற்பகுதி மிகவும் மெதுவாக செல்வதாவும், போர் அடிப்பதாகவும் எதிர்மறை கருத்து வெளியானது. நீண்ட நேரம் சண்டை காட்சிகள் என படத்தை செல்வதாகவும், கிட்டத்தட்ட 3 மணி நேரம் படம் சலிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, படம் வெளியான பிறகு 14 நிமிட காட்சியை படக்குழு குறைத்தது.
இதுவரை நாள் வரை படத்தின் வசூல் எவ்வளவு என சொல்லாமல் மௌம் காத்து வந்த தயாரிப்பாளர் போனி கபூர், தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூலாகி மகத்தான சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ளார்.

