• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அமெரிக்காவில் திருவள்ளுவர் பெயரில் தெரு

உலகப் புகழ்பெற்ற திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் பெயரில் அமெரிக்காவில் ஒரு தெரு அழைக்கப்படவிருப்பது தமிழர்களுக்கு பெருமிதத்தை அளித்துள்ளது.

அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயர் ஒரு தெருவிற்கு சூட்டப்பட இருக்கிறது. வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள பேர்பேக்ஸ் கவுண்டியில் இந்த தெரு அமையவிருக்கிறது.

ஆங்கிலத்தில் ‘Valluvar Way’ என்றும் தமிழில் ‘வள்ளுவர் தெரு’ என்றும் இந்த தெரு அழைக்கப்படும். இந்த அறிவிப்பை வெர்ஜினியா சபை உறுப்பினர் டான் ஹெல்மர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

திருவள்ளுவரின் திருக்குறள் புகழ் உலகப் புகழ்பெற்ற இருந்தாலும் அவரது பெயரில் அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு தெரு அழைக்கப்பட இருப்பது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.

1,330 குறள்களை தந்து அதன் மூலம் மக்களுக்கு தன நன்னெறிகளை உணர்த்தியவர் தான் திருவள்ளுவர். மக்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை, தனது 133 அதிகாரங்கள் மூலம் தெளிவாக பல நூறு வருடங்களுக்கு முன்னரே இந்த உலகிற்கு தெரிவித்து சென்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

இன்று உலகப் பொதுமறை என்று அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நூலினை நமது தமிழ் இனத்தை சேர்ந்த ஒருவர் எழுதியுள்ளார் என்பது, தமிழர்களாகிய நமக்கு மிகப் பெரும் பெருமை என்று கூறலாம்.