• Sun. Apr 2nd, 2023

பனி போர்வை போர்த்தியதுபோல் அழகாய் உள்ள அமெரிக்கா

Byகாயத்ரி

Feb 4, 2022

அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் நிலவிய தீவிர பனிப்பொழிவை டைம் லேப்ஸ் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ நன்கு வெளிக்காட்டி உள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பனிப்பொழிவு நிலவியதை டைம் லேப்ஸ் முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பனிமழை மற்றும் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.டெக்ஸாஸ் மற்றும் கொலராடோவில் இருந்து மத்திய மேற்கு பகுதிகள் வழியாக வடக்கு நியூயார்க்கை இந்த பனிப்புயல் இன்று காலை சென்றடைந்துள்ளது . இந்த அதிதீவிர பனிப்பொழிவால் சுமார் 2400 விமானங்கள் நேற்று முன்தினம் காலையில் ரத்து செய்யப்பட்டது. இந்த பாதிப்பால் ராக்கி மலைத்தொடர் முதல் நியூ இங்கிலாந்து வரை இருக்கும் சுமார் 10 கோடி மக்களுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *