• Fri. Apr 19th, 2024

பங்கு சந்தை உயர்வு

By

Aug 30, 2021 , ,

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் உயர்ந்து 56,526 புள்ளிகளாக உள்ளது.
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு அதிரடியாக உயர தொடங்கியுள்ளது. முதலில் 349 புள்ளிகள் உயர்ந்திருந்த நிலையில், அடுத்த 5 நிமிடங்களில் 400 புள்ளிகள் உயர்ந்து 56,526 புள்ளிகளாக உள்ளது.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 16,820 புள்ளிகளாகவும் பின்பு 16,829 புள்ளிகளாகவும் உயர்ந்து உள்ளது.
கொரோனா 2வது அலையின் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்த சூழலில், கடந்த 2 நாட்களுக்கு முன் பங்கு சந்தையில் அது எதிரொலித்து சரிவை கண்ட நிலையில், இன்று உயர்வடைந்து உள்ளது.
டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகளில் கடந்த 2 நாட்களாக இந்தியா பதக்கங்களை அள்ளி வருகிறது. இன்று வரை மொத்தம், ஒரு தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது. இதன் எதிரொலியாக பங்கு சந்தையில் உயர்வு ஏற்பட்டு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *