சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.36,056 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையில் சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உயர்வு காணப்பட்டு பவுன் மீண்டும் ரூ. 35 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் சிறிது விலை குறைந்தாலும், தொடர்ந்து விலை அதிகரித்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ. 35 ஆயிரத்து 600-க்கு விற்றது. இந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 272 அதிகரித்து ரூ. 35 ஆயிரத்து 872-க்கு விற்றது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 உயர்ந்து சவரனுக்கு 384 அதிகரித்து ரூ.4,507க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 காசு உயர்ந்து ரூ.68.70 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மீண்டும் பவுன் ரூ. 36 ஆயிரத்தை நெருங்கி உள்ளது, அதில் முதலீடு செய்பவர்களை கவலையடைய செய்துள்ளது.
விண்ணை முட்டும் தங்கம் விலை
