மதுரையில் பல்வேறு இடங்களில் வழங்கப்படும் ரேஷன் கடை அரிசி தொடர்ந்து துர்நாற்றம் வீசுவாதகவும், சாப்பிட உகந்தது இல்லை என்றும் முன்னாள் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் R.B.உதயகுமார் மதுரை மாவட்டம் ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று மாதங்களாக ரேஷன் கடைகளில் பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரிசியில் துர்நாற்றம் வீசுவதாகவும், சமைக்க உகந்ததாக இல்லை என்றும், பொது மக்கள் பல்வேறு முறை புகார் கொடுத்தும், சாலை மறியல் செய்தனர். இருப்பினும், இதற்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற நிலையில் அரிசியை சாலைகளில் கொட்டியும் பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அரிசி வழங்கப்படவேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு முன்னாள் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் R.B. உதயகுமார் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.