புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர்களின் உத்தரவுக்கிணங்க கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் கரூர் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

போட்டியிட விருப்பமுள்ள கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வருகைதந்து, கரூர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர், கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி மற்றும் கரூர் மாவட்ட கழக அவைத்தலைவர் திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் A.R.காளியப்பன் ஆகியோரிடம் விருப்ப மனுக்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட, நகர, பேரூர் கழக சார்பு அணி நிர்லாகிகள் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.