• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கேன்சருக்கு அதிநவீன சிகிச்சை

Byp Kumar

Jan 22, 2023

தமிழ்நாட்டில் முதன்முறையாக கேன்சருக்கு அதிநவீன முறையில் சிகிச்சை அளிக்கும் டெமோதெரபி சாதனத்தை பொதுமக்களை வைத்து திறந்து வைத்த மீனாட்சி மிஷன் மருத்துவமனை.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக கேன்சரை கண்டறியக்கூடிய கிளியர் ஆர்.டி மற்றும் சின்க்ரனி டரோமோதெரபி சாதனத்தை பொதுமக்களை வைத்து மருத்துவமனை நிர்வாகம் இன்று திறந்து வைத்தது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையில் தலைவர் டாக்டர். குருசங்கர் கதிரியக்க புற்று நோய்கள் துறை தலைவர் கிருஷ்ணகுமார், குடல் இரைப்பை சிகிச்சை துறை தலைவர் ரமேஷ் அர்த்தனாரி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்றனர்.


பின் செய்தியாளிடம் பேசிய மருத்துவமனையின் தலைவர் குருசங்கர் இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு சிறப்பான மாற்றத்தை விளைவிக்கும் வகையில் கதிரியக்க சிகிச்சையில் இந்த மிக நவீன சாதன அறிமுகம் செய்து உள்ளோம். இதனை பொதுமக்களை கொண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்றார்.டொமோதெரபி என்பது அதிநவீன புற்றுநோய் சிகிச்சை முறையாகும் இதில் உடலில் உள்ள புற்றுநோக்கட்டிகளை முழுவதும் நீக்கும் சிகிச்சையாக இருக்கும், முன்பு புற்று நோய்க்கு இருந்த சிகிச்சையில் புற்றுநோய் கட்டிகள் முழுவதும் அகற்றப்படாத சூழல் இருக்கும் என்றார். இந்த சிகிச்சை இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.