• Sat. Apr 20th, 2024

குமாரபாளையத்தில் மாநில அளவில் யோகாசனப் போட்டி.

தமிழ்நாடு தொழில்முறை தகுதி பதிவுபெற்ற யோகா ஆசிரியர்கள் நலச்சங்கம் மற்றும் எக்செல் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி இணைந்து 3 ஆவது மாநில அளவிலான யோகாசனப் போட்டி மற்றும் பதஞ்சலி யோக சூத்திரம் ஒப்புவித்தல் போட்டிகளை குமாரபாளையம் எக்செல் கல்லூரியில் நடத்தியது.
இதில் தமிழகம் முழுவதும் கொங்கு மண்டலம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 30 பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து 1000 மாணவர்கள் கலந்துகொண்டனர். 21 நடுவர்களைக் கொண்ட யோகாசனப் போட்டிகள் பொதுப் பிரிவு, சிறப்புப் பிரிவு என படிநிலை அடிப்படையில் 7 பிரிவுகள் வீதம் ஒவ்வொரு பிரிவிற்கும் ஆண், பெண் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு …. மாணவர்களுக்கு பதக்கங்களும், கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த தனிநபர் யோகாசன வீர வெற்றியாளர்களுக்கும் கோப்பை, சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.ஒட்டுமொத்த வெற்றியாளராக ஸ்ரீ கரூர் மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி கே.பி.எம்.கிருஷ்ணபிரியா , கரூர் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் பி.அஜய்குமார் தேர்வுசெய்யப்பட்டனர்.


மேலும் இந்தியாவிலேயே முதன்முதலாக பதஞ்சலி யோக சூத்திரம் ஒப்புவித்தல் மற்றும் உரை கூறல் போட்டி நடைபெற்றது. இதில் 60 மாணவர்கள் கலந்துகொண்டு 5 பிரிவுகள் வீதம் முதல் மூன்று வெற்றியாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர். மொத்தமாக 110 வெற்றியாளர்களுக்கும், 30 பள்ளிகளுக்கும் 170 கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளன.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எக்செல் கல்விக்குழுமங்களின் துணைத் தலைவர் மற்றும் செயலாளர் டாக்டர் என்.மதன் கார்த்திக்மற்றும் திருவாரூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நல சேவை மைய இணை இயக்குனர் டாக்டர் என்.செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி பரிசுகளை வழங்கினர். மேலும் இவ்விழாவிற்கு
தமிழ்நாடு தொழில்முறை தகுதி பதிவுபெற்ற யோகா ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் செயலாளர்.ஆர்.அண்ணராஜ் , மாநில இணைச் செயலாளர் .குணசேகரன் , பொருளாளர்,.பாண்டியன் , பரமக்குடி கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.பிரசாத்மற்றும் சி விஜயன், செயற்குழு உறுப்பினர் ஈரோடு மாவட்ட தலைவர் செந்தில்குமார் மாவட்ட பொருளாளர்,மீனாட்சி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *