• Sun. May 5th, 2024

மாநில அளவிலான கபாடி போட்டி..!

ByKalamegam Viswanathan

Aug 1, 2023

சோழவந்தான் அருகே இரும்பாடி பாலகிருஷ்ணா புரத்தில் மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது.

சோழவந்தான். சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் என்.பி. ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் என்.என். பாய்ஸ் நடத்திய மாநில அளவினால் முதலாம் ஆண்டு கபாடி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி பண்ணைசெல்வம் முன்னிலை வகித்தார். அதிமுக ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் போட்டியை தொடங்கி வைத்தார்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரவி சிறப்பு பரிசு,அதிமுக மாவட்ட மருத்துவ அணி டாக்டர் கருப்பையா முதல் பரிசு 25 ஆயிரம் ரூபாய், என்என் பாய்ஸ் 10 அடி கோப்பை, 2வது பரிசு தெற்கு தெரு இளந்தென்றல் குரூப்ஸ் 20 ஆயிரம் ரூபாய், பாஜக மண்டல பொதுச்செயலாளர் கண்ணன் 9 கோப்பை, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பசும்பொன் செல்வகுமார் 3வது பரிசு 15 ஆயிரம் ரூபாய், வசந்த் பிரதர்ஸ் 8 அடி கோப்பை, 4வது பரிசு முன்னாள் திமுக கிளைச் செயலாளர் சரவணன் 10 ஆயிரம் ரூபாய், கே.எஸ். பி. பிரதர்ஸ் 7 அடி கோப்பை, 5 வது பரிசு பாலு பயலுக 8ஆயிரம் ரூபாய், சன் கம்ப்யூட்டர் முருகன் 6 அடி கோப்பை, 6வது பரிசு 6000 ரூபாய் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், விஎன்ஆர் ஸ்போர்ட்ஸ் கிளப் 5 அடிகோப்பை, 7வது பரிசாக 4 ஆயிரம் ரூபாய், சாலச்சிபுரம் திமுக கிளைச் செயலாளர் எஸ்எஸ்கே காசிராஜன்,ஜெய் ஆஞ்சநேயா ட்ராவல்ஸ் ராஜ் 4 அடி கோப்பை, 8வது பரிசாக 3 ஆயிரம் ரூபாய், ஜே டிரான்ஸ்போர்ட், மாணிக்கம் ஸ்போர்ட்ஸ் கிளப் 3 அடி கோப்பை ஆகிய பரிசுகள் வழங்கினர். முதல் பரிசினை கட்டவேலு வீர சகோதரர்கள் அணியும் இரண்டாவது பரிசினை பி கே பி செக்கானூரணி அணியும் மூன்றாவது பரிசினை பி.கே.பி. அய்யனார் கபடி குழு கருப்பட்டி அணியும் நான்காவது பரிசினை வசந்த்பிரதர்ஸ் பி.கே புரம் அணியும் பெற்றது இந்த இரண்டு நாள் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 90 அணிகள் கபாடி போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். சோழவந்தான் சப் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *