தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடன் இருந்த வாகன ஓட்டுனர் மற்றும் அவருடைய நண்பர் இருவரும் கைது செய்யப்பட்டு தேனி பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் தனியார் விடுதியில் சவுக்கு சங்கர் அவரை கைது செய்யும்போது காவல்துறையினரை தகாத வார்த்தையில் பேசுதல் கொலை மிரட்டல் கஞ்சா பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தேனியில் பழனிசெட்டிபட்டி தனியார் தங்கும் விடுதியில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட நிலையில் அவருடன் இருந்த வாகன ஓட்டுநர் ராம் பிரபு மற்றும் அவருடைய நண்பர் ராஜரத்தினம் இருவரும் சவுக்கு சங்கரை கைது செய்யும்போது காவல்துறையிடம் இருவரும் வாகனத்தை பரிசோதனை செய்யும் போது காவல்துறையினரை தகாத வார்த்தை பேசியும் கொலை மிரட்டல் விடுத்தும் வாகனத்தில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலம் கைப்பற்றி அவர்கள் இருவரையும் தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பயன்படுத்துவதற்காக 400 கிராம் கஞ்சாவினை வாகனத்தில் வைத்திருந்ததாகவும் விசேஷ நிகழ்ச்சி ஒன்றிற்கு பங்கேற்பதற்காக வந்துவிட்டு மறுநாள் மூணாறுக்கு செல்ல இருந்ததாகவும் கூறியதாகவும் முதல் கட்ட விசாரணையில் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் மீது காவல்துறையினர் பணி செய்ய விடாமல் அவர்களை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விட்டதாக பல்வேறு வழக்குகளில் பதிவு செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.