

அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே. டி .இராஜேந்திர பாலாஜி குலதெய்வம் விருதுநகர் அருகே உள்ள மூளிபட்டி கிராமத்தில் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள ஸ்ரீதவசிலிங்க சுவாமி கோவிலுக்கு சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.





தொடர்ந்து கோபுர தரிசனம் மற்றும் தவசலிங்க சுவாமிக்கு நடைபெற்ற பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், திருநீறு ,உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜையில், கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.





முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் பரிவட்டம் கட்டி சிறப்பான வரவேற்பு அளித்தனர். பக்தர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே .டி.இராஜேந்திர பாலாஜி பிரசாதம் வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.





