• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்..,

ByM.S.karthik

Sep 6, 2025

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் கூடக்கோவில் ஊராட்சியில் உள்ள பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் கள்ளிக்குடி வட்டார மருத்துவ அலுவலர் ராஜசேகரன் அரசு இராஜாஜி மருத்துவமனை டீன் அருள்சுந்தரேஸ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செல்வராஜ், அலுவலர் சிவசந்திரன், கண்ணன் கருப்பசாமி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டாட்சியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் கண் இதயம் பொது மருத்துவம் குழந்தை வளர்ச்சி மகப்பேறு உட்பட அனைத்து விதமான மருத்துவம் சம்பந்தமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் கருமாத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.