தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி பொதுமக்களை அவர்களது இடத்திலேயே சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
தனது அன்றாட பணிகளுக்கிடையே அமையும் சிறு இடைவெளியில் மக்களின் கருத்துகளை கேட்டறிகிறார்.
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரவுண்டு கிளம்பி விடுவார்.
அதேபோல் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னை தியோசபிக்கல் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்றிருந்தார்.
அப்போது அங்கு நடை பயிற்சி மேற்கொள்ள வந்தவர்களுடன் ஸ்டாலின் உரையாடினார்.
“சார் இரு வருடங்களுக்கு முன்னர் விமான நிலையத்தில் உங்களை சந்தித்தேன்.
நீங்கள் கட்டாயம் ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும் என்று கூறினேன்.
நீங்க ஆட்சிக்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்றீங்க.
இது அப்படியே தொடர வேண்டும், நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்” என்று கூறினார்.
கால்பந்து விளையாட்டிற்காக ஸ்பெயின் சென்றுள்ள உங்கள் பேரன் வெற்றியுடன் திரும்ப வேண்டும். அவர் பயிற்சி எடுக்கும் போது பார்த்திருக்கிறோம்” என்று அப்பெண் கூற ஸ்டாலின் முகத்தில் மகிழ்ச்சி பெருகியது.
மேலும் அவர், “கடைசியா ஒன்று சார், எப்படி சார் இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க?”
என்று கேட்டவுடன் அந்த இடமே கலகலப்பானது.
அதற்கு ஸ்டாலின் உடற்பயிற்சி செய்கிறேன் என்று சொல்ல அந்த வீடியோவையும் யூடியூப்பில் பார்க்கிறோம் சார் என்று அந்த பெண் கூறினார்.