மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி ஸ்ரீ மகாபெரியவரின் ‘அனுஷ உற்சவம்’ நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனி, எஸ்.எம். கே., திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் ஸ்ரீ மகா பெரியவா மகிமை என்ற தலைப்பில் பேசியதாவது. யாத்திரை செல்வது மடாதிபதிகளின் கடமை. மக்களை தேடி தேடி போய் தரிசனம் கொடுப்பது வழக்கம். பாரத தேசத்தில் எந்த சன்னியாசியும் செய்யாத காரியத்தை ஸ்ரீ மகா பெரியவர் செய்திருக்கிறார். அவரது காலடி படாத இடமே இல்லை ரிஷிகள் அதிகமாக வாழ்ந்த மண் ரஷ்யா அங்கு செல்ல வேண்டும் என்பது அவரது விருப்பம் ஆனால் சந்நியாசிகள் கடல் கடந்து செல்லக்கூடாது அதனால் அவர் அங்கு செல்லவில்லை மேலும் மும்பையும் செல்லவில்லை .கடல் தாண்டினால் சாஸ்திர பங்கம் வந்துவிடும் என்பதால் பூனா வரை சென்றார். சாஸ்திர சம்பிரதாயங்களை முறையாக முழுமையாக கடைப்பிடித்தவர் ஸ்ரீ மகா பெரியவர் குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை. நாம் குருவை சிக் கென பற்றிக்கொள்ள வேண்டும். இறைவனிடம் மன சுத்தத்துடன் அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம். ஜபம் பூஜை அர்ச்சனை இவை இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள். ஒரு விவசாயி பெரியவரிடம் நான் சாதாரணமானவன் நான் வழிபாடு செய்ய என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது சூரியனை வழிபடு அதுவே போதும் என்றார். இன்று சனாதன தர்மத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன .ஆதி காலத்தில் இருந்து .
இந்து மதத்திற்கு சோதனைகள் இருந்து கொண்டே இருந்திருக்கிறது .நம் மதம் எப்போதும் யாராலும் அழிக்க முடியாத ஒன்று என்று வரலாற்றை திரும்பிப் பார்த்தால் தெரியும். இந்து மதம் எப்பொழுது தோன்றியது என்று சொல்ல முடியாத ஒன்று.நாம் பல யுகங்களை கடந்து வந்திருக்கிறோம். ஆயிரக்கணக்கான மகான்கள் தோன்றிய மதம் ஹிந்து மதம். புண்ணிய தீர்த்தங்களை நதிகளை நாம் அன்னையாக கருதுகிறோம்.இன்று நவீனம் விஞ்ஞானம் நமக்கு கொடுத்திருக்கிற வசதியை விட கேடு அதிகம். பெரியவர் கட்டுப்பாடு உள்ள சுதந்திரம் வேண்டும் என்றார். ஆதிசங்கரர் மதத்தை ஸ்தாபித்தது வேதத்தை வளர்ப்பதற்காகத்தான். அது போல சன்னியாசி சகல உயிர்களுக்கும் சமமானவர் என்றும் என்கிறார் மகா பெரியவர். சன்னியாசிகள் பேதம் பார்க்கக்கூடாது மேலும் தெரியாமல் செய்த பாவத்தை போக்குவதற்கு ஒரு நாளைக்கு இரண்டு நல்லது செய்ய வேண்டும் என்கிறார். உடலும் உணர்வுகளும் சம்பந்தம் இருக்கிறதும் என்கிறார் மகா பெரியவர். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் சாது தரிசனம் சாப விமோசனம் உலகில் குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை மந்திர ஒலிக்குரிய சப்தம் மிகச்சிறந்தது. நம்முடைய நம்முடைய சிறுசிறு பிரார்த்தனைகள் வேண்டுதல்கள் வீண் போவதில்லை. இவ்வாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]
- ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசுதிருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு […]
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]
- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]