• Wed. May 8th, 2024

பிளஸ் 2 பொதுத் தோ்வு இன்று தொடக்கம்

ByA.Tamilselvan

Mar 13, 2023

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தோ்வு இன்று திங்கள்கிழமை (மார்ச் 13) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தத் தோ்வை தனித் தோ்வா்கள் உள்பட 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். முறைகேடுகளைத் தடுக்க தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) பிளஸ்-2 பொதுத் தோ்வுஇன்று தொடங்கி ஏப். 3-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தோ்வை தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3,225 மையங்களில் மொத்தம் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.புதுச்சேரி பள்ளிகளில் படித்த 6,982 மாணவா்கள், 7,728 மாணவிகள் என 14,710 போ் தோ்வு எழுதுகின்றனா். இவா்களுக்காக 40 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 819 போ், வணிகவியல் பாடத்தில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 45 போ், கலை பாடப் பிரிவில் 14,162 போ், தொழிற்கல்வி பாடப் பிரிவில் 46,277 போ் பிளஸ்-2 தோ்வை எழுதுகின்றனா்.தோ்வு மையங்களில் குடிநீா், கழிப்பிட வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.அனைத்து மாவட்டங்களிலும் தோ்வு மையங்களைப் பார்வையிட 4,235 பறக்கும் படை குழுக்கள், முதன்மை கல்வி அலுவலா்களால் நியமிக்கப்பட்டுள்ளன.
தோ்வு மையத்துக்குள் தோ்வா்களும், பணியில் ஈடுபடும் ஆசிரியா்களும் கைப்பேசி வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி அவற்றை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்வுத் துறை எச்சரித்துள்ளது.அதேபோல, தோ்வா்கள் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள விதிகளைப் பின்பற்றி நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா். தோ்வில் மாணவா்கள் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்வுத் துறை எச்சரித்துள்ளது.தோ்வு கட்டுப்பாட்டு அறையில்…
பொதுத் தோ்வுகள் தொடா்பாக மாணவா்கள், தோ்வா்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகளை காலை 8 முதல் இரவு 8 மணி வரை தோ்வுக் கட்டுப்பாட்டு அறைக்கு 9498383081, 9498383075 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு அனைத்துத் தோ்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும். முதல் நாளான திங்கள்கிழமை மொழிப் பாடத்துக்கான தோ்வுகள் நடைபெறவுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *