• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

நாடுநாடாக ஓடி ஒழியும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

ByA.Tamilselvan

Jul 14, 2022

இலங்கையிலிருந்து தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு சென்றார்.அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றவர் தற்போது சவுதி அரேபியா செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில்போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர். இதனால், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறினார். நேற்று மாலத்தீவு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கு எதிர்ப்பு கிளம்பியதால், இன்று சிங்கப்பூர் செல்வதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மாலத்தீவில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார். மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு தமிழர்கள் அதிகம் உள்ளனர் என்பதால் அங்கும் பாதுகாப்பு இல்லை என நினைத்திருப்பாரா என்னவோ சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.