• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மண்டலபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

Feb 1, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை உடன் முதலாம் கால யாக நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி மகா பூர்ணாஹூதியுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றது தொடர்ந்து காசி விஸ்வநாதருக்கு பஞ்சமுக அர்ச்சனையும் ஸ்ரீ காசி விசாலாட்சிக்கு நவமுக அர்ச்சனையும் நடைபெற்றது. குருவித்துறை குருபகவான் கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் கீழமாத்தூர் சிவன் கோவில் அர்ச்சகர் விக்னேஸ்வர சிவாச்சாரியார் ஆகியோர் பூஜை செய்தனர் தொடர்ந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் பால் தயிர் வெண்ணெய் மஞ்சள்பொடி மா பொடி திரவிய பொடி இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று கலச அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது அன்னதானம் நடைபெற்றது விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம தலைவர் ஆர். நாகேந்திரன் கிராமப் பொருளாளர் ஆர் ராஜாராமன் அறங்காவலர் குழு முத்துப்பாண்டி கோவில் நிர்வாக அதிகாரி கார்த்திகை செல்வி உள்ளிட்ட பலர் மற்றும் இரும்பாடி கிராமத்தினர் செய்திருந்தனர்.