மிகப் பழமையான தோற்றத்தில் 14000 சதுர அடியில் கட்டப்பட்டு பூர்த்தியான புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தின் கற்கோவில் இந்தியாவிலேயே மிகப் புகழ்மிக்க ஆலயமாக புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயம் திகழ்கிறது.
இந்த ஆலயத்தின் திருப்பணிகள் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பாக துவங்கப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்த ஆலயத்தின் கல் சிற்ப பணிகளாக 14000 சதுர அடியில் மிகப் பழமையான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட பிரபல சிற்ப கலைஞரும் ஸ்தபதியாருமான RMR.ரவிச்சந்திரன் என்பவர் பேட்டியளிக்கையில்,
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக இந்த ஆலயத்தின் திருப்பணிகள் துவங்கப்பட்டு 14000 சதுர அடியில் 93 -தூண்களை கொண்டும் 1200 சிற்பங்களை சிற்ப சாஸ்திரம் முறையில் கற்களைக் கொண்டு இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டு மிகப் பழமையான தோற்றத்திலும் உருவாக்கப்பட்டுள்ளோம் என தெரிவித்தனர்.